சாம்சங் நிறுவனத்திடம் மீண்டும் பேச்சுவார்த்தை: அமைச்சர் சி.வி.கணேசன் பதில்

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பேசியதாவது: சட்டப்பேரவை பாரம்பரியமாக கடைபிடிக்கும் மரபை மாற்ற வேண்டுமென்று அடாவடித்தனம் செய்வதோடு, தான் பிடித்த முயலுக்கு 3 கால் என்று ஆளுநர் அடம்பிடிக்கிறார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட பாஜ அல்லாத எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் ஆளுநர்களின் செயல்பாடுகள் இப்படித்தான் மோசமாக உள்ளன.

ஆளுநரை திரும்பப் பெற வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்கும் காலாவதியான ஆளுநரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். மரபுகளை காப்பாற்றும் முதல்வருக்கு பாராட்டு. ஆளுநர் உரையுடன் கூட்டம் துவங்கும் என்ற நடைமுறையை நீக்கும் வகையில் சட்டத்தை திருத்தும் முதல்வரின் முயற்சியும் வரவேற்கத்தக்கது.

சென்னை அருகே இயங்கி வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பிரச்னை நீண்ட நாட்களாக நீடித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக பணி நீக்கம் செய்யப்பட்ட சங்கத் தலைவர்கள் உள்பட 27 பேருக்கு இன்னமும் பணி வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதுடன் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரச்னையில் அரசு உரிய முறையில் தலையிட்டு அந்த 27 பேருக்கும் மீண்டும் பணி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அமைச்சர் சி.வி.கணேசன்: இந்த பிரச்னை குறித்து உடனடியாக சாம்சங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இதில் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

Related Stories: