கேள்வி நேரத்தின் போது திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் (அதிமுக), பேசுகையில், ‘‘திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தேங்கி உள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், ‘‘விஜயகுமாரை ரொம்ப நாளாக தேடிக் கொண்டு இருக்கிறேன். நாங்கள் எந்த வேலை செய்வதற்காக நீங்கள் அனுமதி அளிக்கிறீர்களா?. சொந்தமான இடம் வாங்கி குப்பை கொட்டினாலும், கல் குவாரியில் கொட்டினாலும் பிரச்னை ஏற்படுகிறது.
நகரத்தை தாண்டி 15 கிலோ மீட்டர் இடம் இருந்தாலும் அங்கு ஏற்பாடுகளை செய்து குப்பை கொட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். சென்னை, கோவை, மதுரையில் 200 கோடி ரூபாய் செலவில் குப்பையில் இருந்த மின்சார தயாரிக்கும் திட்டம் தொடங்க உள்ளோம். குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை திருப்பூரில் இருந்து தொடங்க கூட தயாராக உள்ளோம்” என்றார்.
