தமிழகத்தில் 21,588 சிறைவாசிகள்: அமைச்சர் ரகுபதி

கேள்வி நேரத்தின் போது கலசப்பாக்கம் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (அதிமுக) பேசுகையில், ‘‘திருவண்ணாமலையில் அதிகளவில் குற்றங்கள் நடைபெறுகிறது. இதனால் கிளை சிறைகளின் எண்ணிக்கை மற்றும் சிறைவாசிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, ‘‘திருவண்ணாமலையில் அதிக குற்றங்கள் நடைபெறுவதாக உறுப்பினர் கூறிய தகவல் உண்மைக்கு புறம்பானது.

சிறைவாசிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பது தான் இந்த அரசின் நோக்கம். தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகள், 13 மாவட்ட சிறைச்சாலைகள், 82 கிளை சிறைச்சாலைகள், 8 பெண்கள் சிறைச்சாலைகள், 3 திறந்தவெளி சிறைச்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் 23,783 சிறைவாசிகள் இருக்க அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதில் 21,558 சிறைவாசிகள் இருக்கிறார்கள்’’ என்றார்.

Related Stories: