திமுக ஆட்சியில் இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன்

திருப்பத்தூர் எம்எல்ஏ அ.நல்லதம்பி பேசுகையில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு மக்கள் பட்டாக்கள் கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளனர். அப்பகுதி மக்களுக்கும் பட்டா கிடைக்க ஆவன செய்ய வேண்டும்’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், ‘‘தமிழ்நாட்டில் இதுவரைக்கும் இல்லாத அளவிற்கு 22 லட்சம் பேருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கியிருக்கிறார்.

உறுப்பினர் குறிப்பிட்ட அப்பகுதி மக்களுக்கும் பட்டாக்களை வழங்குவற்குரிய வழிவகைகளை அரசு ஆராயும். வழிவகை இருப்பவர்களுக்கு, வழிவகைகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு தேவையான வேலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்ய அறிவுறுத்தியிருக்கிறார். அதன் அடிப்படையில் கோரிக்கை பரிசீலிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: