சென்னை: சேலம் மேற்கு தொகுதி ராமதாஸ் ஆதரவு பாமக எம்எல்ஏ அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அன்புமணி ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், அருள் தரப்பினர் அன்புமணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சேலம் ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்படது. இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் முன்ஜாமீன் கோரி அருள் எம்எல்ஏ உள்ளிட்ட 14 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா விசாரித்து எம்எல்ஏ அருள் உள்ளிட்ட 14 பேருக்கு காவல்துறை விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
கொலை முயற்சி வழக்கு பாமக எம்எல்ஏ உள்பட 14 பேருக்கு முன்ஜாமீன்
- பிஎம்எம். எம்.
- சென்னை
- சேலம் ஏத்தாப்பூர்
- நிலையம்
- பா.ம.க.
- சட்டமன்ற உறுப்பினர்
- அருள்
- ராமதாஸ்
- சேலம் மேற்கு
