நாமக்கல்: நாமக்கல்லை அடுத்த வள்ளிபுரத்தில், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் செயற்குழு கூட்டம், நேற்று மாநில தலைவர் தனராஜ் தலைமை வகித்து பேசுகையில், ‘‘15 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரையிலான லாரிகளுக்கு, தகுதி சான்றிதழ் புதுப்பிப்பு கட்டணத்தை ஒன்றிய அரசு 10 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. இதனால் ஒரு லாரி வைத்து தொழில் செய்யும் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எப்.சி. கட்டண உயர்வால், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் லாரிகள் எப்.சி. செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசின் போக்குவரத்து துறை ஆணையரே தெரிவித்துள்ளார். எனவே, புதுப்பிப்பு கட்டணத்தை நிறுத்தி வைக்க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதேபோல் விஎல்டிடி கருவி பொருத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.
