28.11.2024 முதல் 4.12.2024 வரை
சாதகங்கள்: ராசிநாதன் மூன்றில் இருந்தாலும், வக்கிரகதியில் இருப்பதால் தைரியக் குறைவாக இருந்தவர்கள்கூட தைரியம் பெறுவீர்கள். அவருடைய பார்வை பாக்கியஸ்தானத்தில் விழுவதால், சில எதிர்பாராத நன்மைகள் உண்டு. உறவினர்கள் உதவுவார்கள். சின்ன, சின்ன ஆசைகள் நிறைவேற வாய்ப்பு இவ்வாரம் உண்டு. புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து குருவால் பார்க்கப்படுகின்றார். அதனால் புதனின் ஆற்றல் அதிகரிக்கும். பணவரவுகளில் பிரச்னை இருக்காது. கணவன், மனைவி உறவுகளும் ஓரளவு சீராகவே இருக்கும்.
கவனம் தேவை: ராசிநாதன் நீசம் அடைந்து இருப்பதால், எதிர்மறை சிந்தனை மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ, நாம் போகின்ற பாதை சரிதானா என்கின்ற சந்தேகம் இருக்கும். அதற்கேற்றவாறு சில வேலைகள் தடைபட்டு நிற்கும் அல்லது தாமதமாகும். குடும்பச் செலவுகள் அதிகரிக்கும். 12ல் சனி இருப்பதால், செலவுகள் எதிர்பாராத வகையில் இருக்கும். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருந்தால் கஷ்டங்கள் குறையும்.
சந்திராஷ்டமம்: 27.11.2024 மாலை 6.07 மணி முதல் 30.11.2024 காலை 6.03 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை காலையில் எதுவும் சாப்பிடாமல் மதியம் பூஜை செய்துவிட்டு சாப்பிடவும். வயது முதிர்ந்தவர்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும்.