விருச்சிகம்

(5.6.2025 முதல் 11.6.2025 வரை)

சாதகங்கள்: இதுவரை நீச கதியில் இருந்த செவ்வாய் பலம் பெற்று பத்தாம் இடத்திற்கு நகர்வது சிறப்பு. பத்தாம் இடத்தில் செவ்வாய் இருக்கிறார். புதிய தொழில் முயற்சி தொடங்கும் எண்ணம் ஏற்படும். சொத்துக்களை வாங்கும் முயற்சி சாதகமாக அமையும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு கௌரவம் கிடைக்கும். அஷ்டமத்தில் குரு புதன் இருக்கின்றார்கள். எட்டுக்குரிய புதன் எட்டாம் இடத்தில் மறைவதால், பெரும் சிரமங்கள் ஏற்படாது. மறைமுக உதவிகளும் ஆதரவும் கிடைக்கும். குருவின் பார்வை தன குடும்ப ராசியில் படிவதால் குடும்பப் பிரச்னைகள் பெரிய அளவில் ஏற்படாது. பொருளாதார பிரச்னைகளும் ஏற்படாது என்பது ஒன்றே இப்போதைக்கு ஆறுதல்.

கவனம் தேவை: அஷ்டம குரு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏழில் சூரியன் ராசியைப் பார்க்கின்ற அர்த்தாஷ்டம சனி ராகு அதோடு செவ்வாயின் பார்வை இவைகளெல்லாம் மனதளவிலும் உடலளவிலும் சிரமங்களைத் தரும் அமைப்பு. குறிப்பாக, உடல் நலனில் மிகுந்த அக்கறை தேவை. ஏழாம் இடத்தில் சூரியன் இருப்பதால் எந்தப் பயனும் இல்லாத தகவல் தொடர்புகள், பிரயாணங்கள் ஏற்படலாம். ஆறில் சுக்கிரன் இருப்பதால் மனதில் கவலை அரித்துக் கொண்டே இருக்கும்.

பரிகாரம்: கந்தனை வணங்குங்கள். கவலைகள் தீரும்.