மிதுனம்

22.5.2025 முதல் 28.5.2025 வரை

சாதகங்கள்: ராசியில் வந்து குரு அமர்ந்திருக்கிறார். சப்தம தசம கேந்திரங்களுக்கு அதிபதியானவர் ராசி கேந்திரத்தில் அமர்ந்திருப்பது ஒரு வகையில் சிறப்புப் பலன்களை தரவே செய்யும். கணவன் மனைவி உறவுகளில் முன்னேற்றம் இருக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். தொழில் முயற்சிகள் பலனளிக்கும். காரணம், ஒன்பதில் சனி ராகு அமர்ந்து இருக்கின்றார்கள். 12ல் சூரியன் புதன் இணைந்திருப்பதால், வேலை விஷயங்கள் சிறப்பாக இருக்கும். குறிப்பாக, வெளிநாட்டு வேலை வெளி மாநில வேலை கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.

கவனம்தேவை: வேலை விஷயமாக இடமாற்றங்கள் உண்டு. சிலர் குடும்பத்தை தற்காலிகமாக பிரிய வேண்டி இருக்கும். சிலருக்கு உத்தியோக மாற்றங்களும் ஏற்படலாம். 12-ஆம் இடத்தில் சூரியன், பத்தாம் இடத்தில் சுக்கிரன், 12-ஆம் இடத்தில் ராசிநாதன் புதன் என இருப்பதால், காசு பணத்தில் கவனம் தேவை. செலவுகளும் விரயங்களும் அதிகரிக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை தவறாமல் பெருமாள் கோயிலுக்குச் செல்லுங்கள். வியாழக்கிழமை அருகாமையில் ஏதேனும் மகான்களில் அதிஷ்டானம் பிருந்தாவனம் இருந்தால் மாதம் ஒருமுறையாவது அங்கே சென்று வாருங்கள்.