(5.6.2025 முதல் 11.6.2025 வரை)
சாதகங்கள்: இரண்டு ஏழுக்குரிய சுக்கிரன் ராசியில் அமர்ந்திருப்பதும், 5க்குரிய சூரியன் தன குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் நல்ல அமைப்பு. மிதுன ராசியில் குருவும் புதனும் சேர்ந்து இருக்கிறார்கள். மிக அழகான முறையில் புதிய திட்டங்களை அமல்படுத்தலாம். தெய்வப் பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரத் தொடர்புகள் பலமாகும். 7க்கு உரியவர் ராசியில் இருப்பதால், நண்பர்களாலும் மனைவி மற்றும் அவரைச் சார்ந்தவர்களாலும் நல்ல பலன் கிடைக்கும். சனி ராகு லாபஸ்தானத்தில் வீரியம் பெற்று இணைந்திருப்பதால், லாபத்தில் ஒரு குறையும் இருக்காது. ராசிநாதன் நீச கதி நீங்கி வாரத் தொடக்கத்தில் விலகுவதால், ராசி சற்று பலம் பெறுகிறது.
கவனம் தேவை: ஐந்தாம் இடத்தில் செவ்வாய் கேது இணைகிறார்கள். சனி ராகு பார்வையின் இருப்பதால் மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். சில நேரங்களில் வேலை களில் தவறுகள் நிகழும். மனம் எதிர்மறையாக விஷயங்களை நினைத்து குழம்பத் தொடங்கும். பிள்ளைகள் வழியில் பிரச்னைகள் வரலாம்.
சந்திராஷ்டமம்: 9.6.2025 காலை 8.50 முதல் 11.6.2025 இரவு 8.10 வரை சந்திராஷ்டமம்.
பரிகாரம்: ஒருமுறை குலதெய்வம் கோயிலுக்குச் சென்று வாருங்கள். வீட்டிற்கு அருகில் கோயிலுக்கு சென்று விளக்கு போடுங்கள்.