கும்பம்

(4.12.2025 முதல் 10.12.2025 வரை)

சாதகங்கள்: செவ்வாய் ராசிக்கு லாபஸ்தானத்தில் வந்து அமர்ந்திருக்கிறார். ராசிக்கு 10-ஆம் இடத்திற்கு புதன் சூரியன் இணைந்திருக்கிறார்கள். பத்தாம் இடத்தில் ஆத்ம காரகன் சூரியன் இணைந்திருப்பதால் சிறந்த யோகம் உண்டு. அரசாங்க விஷயமான முயற்சிகள் உங்களுக்குச் சாதகமாக பலம் தரும். அரசாங்க உதவியும் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். தன லாபம் உண்டு. புதன் சூரியன் இணைந்திருப்பதால் பிரயாணங்கள் மகிழ்ச்சியும் சாதகமும் உண்டு. தொழில் வளர்ச்சி கருதிச் செய்யும் முயற்சிகள் பலன் அளிக்கும். சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் நன்மைகள் அதிகரிக்கும். தடைகள் அகலும்.

கவனம் தேவை: சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றங்கள் வரலாம். ஆறாம் இடத்தில் குரு அமர்ந்திருப்பதால் தேவையற்ற கடன் பிரச்னைகளும் பகையும் ஏற்படலாம். எதிரிகள் பலம் பெற வழிவகுக்க வேண்டாம். தேவையற்ற விதத்தில் மற்றவர்களின் செயல்களில் மூக்கு நுழைக்க வேண்டாம். வீண் பழிகளும் மனக்கசப்புகளும் உண்டாகும்.

பரிகாரம்: அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அம்பாளுக்கு விளக்கு ஏற்றுங்கள்.