(5.6.2025 முதல் 11.6.2025 வரை)
சாதகங்கள்: இதுவரை லாபஸ்தானத்தில் இருந்த செவ்வாய் விரய ஸ்தானத்திற்கு வந்து கேதுவோடு இணைகிறார். மேஷ ராசியின் உள்ள சுக்கிரன் தன குடும்பஸ்தானத்தைப் பார்வையிடுவதால் அந்த வீடு பலம் பெறுகிறது. குடும்பமும் பொருளாதாரமும் சிக்கலின்றி இருக்கும். அதோடு அந்த ஸ்தானத்திற்கு குருவின் பார்வையும் கிடைக்கிறது. ராசிநாதன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று குருவோடு இணைந்து இருக்கின்றார். தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். துணிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் மாறி அமைதி கிடைக்கும்.
கவனம் தேவை: விரய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதும், சனி ராகு பார்ப்பதும் மருத்துவ செலவுகளை அதிகரித்துவிடும். உடல்நிலையை மிக ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். சகோதர உறவுகளில் கசப்புகள் வரலாம். சேமிப்பு குறையும். திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டி இருக்கும். 10ல் உள்ள குருவால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பல பிரயாணங்கள் எதிர்பார்த்த பலனைச் செய்யாது.
பரிகாரம்: தினம் விளக்கேற்றி வைத்து மகாலட்சுமியை வணங்குங்கள். காலை சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.