சிம்மம்

(12.6.2025 முதல் 18.6.2025 வரை)

சாதகங்கள்: ராசிநாதன் சூரியன் 11ல் இருப்பதும், புதன் ஆட்சி பெற்று இருப்பதும், புதன் தன குடும்ப அதிபதியாக இருப்பதும் அற்புதமான அமைப்பு. சிம்ம ராசி நேயர்களுக்கு இது நல்ல நேரம்தான். குருவும் லாபஸ்தானத்தில் இருக்கின்றார். அவருடைய பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிவதால் எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமின்றிச் சிறப்பாக நடைபெறும். ஏழாம் இடத்தில் உள்ள ராகு, சனி தோஷத்தையும் குரு பார்வை குறைக்கிறது. பாக்கியஸ்தான சுக்கிரன் நல்ல அமைப்பு. பொருளாதார மேம்பாட்டை காண்பிப்பது. எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். சந்திக்க வேண்டிய நபர்கள் உங்களைச் சந்திப்பார்கள். அந்தச் சந்திப்பு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும்.

கவனம் தேவை: ஏழாம் இடத்தில் சனி, ராகு இணைவு என்பதாலும் அதோடு செவ்வாயும் பார்ப்பதாலும் கணவன் / மனைவியின் ஆரோக்கியப் பிரச்னைகளைக் குறித்து முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாய் தகராறுகள் மனக்கசப்பைத் தரும் என்பதால், உணர்ச்சி வசப்பட்டு பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். ராசியில் செவ்வாய் கேது இணைவும், சனி பார்வையும் இருப்பதால் பிரயாணங்களில் கவனம்தேவை. நீங்களே வண்டியை ஓட்டும் போது அதி ஜாக்கிரதையாக ஓட்டவும். இரவுப் பயணத்தை தவிர்ப்பது இன்னும் நல்லது.

பரிகாரம்: ஜென்மத்தில் கேது இருப்பதால், விநாயகரை விடாமல் வணங்குங்கள். வெற்றியைத் தருவார்.