துலாம்

22.5.2025 முதல் 28.5.2025 வரை

சாதகங்கள்: ராசியாதிபதி சுக்கிரன் 6ல் உச்சம் பெற்றிருப்பதால் சில சங்கடங்கள் வந்தாலும்கூட அஷ்டமாதிபதி 6ல் போய் நிற்பதால் அந்த கஷ்டங்களை, நஷ்டங்கள் இல்லாமல் சமாளிக்கும் ஆற்றலையும் தருவார்.ராசிநாதனின் பலம் உங்கள் வாழ்வை சகல வழிகளிலும் உயர்த்தும். பொருளாதாரம் சிறப்பான நிலையில் இருக்கும். விழாக்களில் கலந்து கொள்வீர்கள். ராசியின் பலத்தை அதிகப்படுத்துவது குருவினுடைய சுபப் பார்வை. சுபகாரியங்கள் முடிவாகாமல் இருந்தால் நல்ல முறையில் முடிவாகும். முன்னேற்றப் பாதையை நோக்கி நகர்வதை உணர்வீர்கள்.

கவனம்தேவை: யாருடனும் பகை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். நீங்கள் ஒன்று பேச அது வேறொரு கோணத்தில் தவறாக எடுத்துக் கொள்ளப்படும். பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தம்பதிகளுக்குள் தற்காலிகமான மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அதனால் சிறு பிரிவுகளும் ஏற்படலாம். கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய், சனி பார்வை வாகனங்களை இயக்குவதிலும் பயணத்திலும் கவனமாக இருக்க வேண்டிய அவசியத்தைக் குறிப்பிடுகிறது.

சந்திராஷ்டமம்: 26.5.2025 பகல் 1.41 முதல் 28.5.2025 பகல் 1.36 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: மாலை விளக்கேற்றி நரசிம்மரை வணங்குங்கள். நல்லது நடக்கும்.