மகரம்

28.11.2024 முதல் 4.12.2024 வரை

சாதகங்கள்: ராகு, பலம் பெற்று இருக்கிறார். சூரியன் நன்மை செய்யும் அமைப்பில் இருக்கிறார். சுக்கிரன் 12ல் இருந்தாலும், அவர் சுகங்களையும் பொருளாதார உயர்வையும் ஏற்படுத்துவார். நினைத்த காரியங்கள் வெற்றி பெறும். செய்யும் செயல் உங்களுக்குச் சாதகமான பலனைத் தரும். எதிலும் ஊக்கமோடு செயல்படுவீர்கள். வியாபாரம் முன்னேற்றமாக இருக்கும். தடைபட்ட காரியங்கள் நடைபெறும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புண்டு. அலுவலகத்தில் உங்கள் சொல் செயல் இரண்டும் பாராட்டப்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கவனம் தேவை: செவ்வாயின் பார்வை உங்கள் குடும்பஸ்தானத்தின் மீதும் உங்கள் ராசியின் மீதும் விழுவதால், அவசரமாக வார்த்தையை விட்டுவிட்டு, பிறகு ஏன் இப்படிப் பேசினோம் என்று வருத்தப்படுவீர்கள். சகோதர உறவுகள் கசந்து போகின்ற அளவுக்கு நடந்து கொள்ள வேண்டாம். சுகாதிபதி செவ்வாய் நீசம் அடைந்திருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு தேவையற்ற இடமாற்றம் ஏற்படும். நான்குக்குரியவர் செவ்வாய் என்பதால் தாயின் உடல் நிலையில் கவனம் செலுத்தவும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை முருகனையும் சனிக்கிழமை ஆஞ்சநேயரையும் வணங்குங்கள்.