×

ரிஷபம்

(19.6.2025 முதல் 25.6.2025 வரை)

சாதகங்கள்: பன்னிரண்டில் சுக்கிரன். இரண்டாம் இடத்தில் புதன்.அவரோடு தனகாரகன் குரு. குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் விழுகிறது. வாரத்தின் தொடக்கத்தில் பல கிரகங்கள் சாதகமாகவே இருக்கின்றன. பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது. சேமிப்புக்கும் வழி உண்டு. சிலருக்கு இடமாற்றமும், வீடு மாற்றமும் அமையும். குருவோடு புதன் இணைந்து இருக்கின்றார். பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும் அமைப்புண்டு. தாய்வழிச் சொந்தங்கள் கை கொடுக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வெற்றி பெற வாய்ப்பு அதிகம். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும்.

கவனம் தேவை: இரண்டாம் இடத்தில் சூரியன் இருப்பதால், அடிக்கடி மனக் கவலையும், குழப்பமும் ஏற்படும். மகிழ்ச்சியை மட்டுப்படுத்தும். வெளிநாட்டு முயற்சிகளில் தடைகளும் தாமதங்களும் ஏற்படலாம். 7-ஆம் அதிபதி செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து இருப்பதால், கணவன் மனைவி உறவுகளில் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டும். தாயின் உடல் நிலையில் கவனம் தேவை. சொத்துக்களில் வில்லங்கம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாங்கும் போதும் விற்கும் போதும் கவனமாக இருங்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்குங்கள். மாற்றுத்திறனாளிக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

Tags :
× RELATED மீனம்