(11.12.2025 முதல் 17.12.2025 வரை)
சாதகங்கள்: வார மத்தியில் சூரியன் தன குடும்ப ராசியில் செவ்வாயோடு இணைகிறார். ராசியில் சுக்கிரனும் லாபாதிபதியான புதனும் இணைந்திருப்பது சிறந்த அமைப்பு. சுக்கிரன் ஏழாவது ராசியைப் பார்ப்பதால் கூட்டுத்தொழில் முன்னேற்றமாக நடைபெறும். கணவன் மனைவி உறவுகளின் இணக்கம் ஏற்படும். அதனால் குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். சனி வக்கிர நிவர்த்தி பெறுவதால் வேலை செய்யும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். குருபகவான் ராசியைப் பார்ப்பதால், துன்பங்கள் விலகிவிடும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கூடும். விரும்புகின்ற, எதிர்பார்த்த இடமாற்றங்கள் ஏற்படலாம். புதிய கட்டிடத்திற்குச்செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம்.
கவனம் தேவை: வாக்கு ஸ்தானத்தில் இரண்டு நெருப்பு கிரகங்கள் இணைந்திருப்பதால், பேச்சில் கவனம் தேவை. வேகமாகப் பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ள வேண்டாம். தேவையற்ற வம்பு வழக்குகளில் ஈடுபட வேண்டாம். நான்காம் இடம் பலம் குறைந்து இருப்பதால், சுகம் குறையும். தாயார் உடல் நலனில் கவனம் தேவை. தேவையற்ற காரியங்களைச் செய்து மன நிம்மதியை இழக்க வேண்டாம்.
பரிகாரம்: மாலை நேரத்தில் அகல்விளக்கு ஒன்று ஏற்றி வழிபட்டு வாருங்கள்.ஏற்கனவே பூஜை அறையில் விளக்கு இருந்தாலும் இது கூடுதல் விளக்காக இருக்க வேண்டும்.
