7.11.2024 முதல் 13.11.2024 வரை
சாதகங்கள்: வார ஆரம்பத்தில் சுக்கிரன் ராசியில் வந்து தனித்து அமர்கிறார். ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனி வெற்றிக்கான ஸ்தானத்தில் இருக்கின்றார். இவைகள் சாதகமான அம்சங்கள். மகிழ்ச்சிகரமான தருணங்கள் உண்டு. சிலருக்கு வீடு வேலை மாற்றங்கள் ஏற்படும். அதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். வரவேண்டிய கடன்கள் வசூல் ஆகிவிடும். ஆடம்பரப் பொருட்கள், வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கும் சுபச் செலவுகள் ஏற்படும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான நேரம் இது. சிலருக்கு பதவிகள் கிடைக்கும். தொழில் மாற்றமும் சிலருக்கு உண்டு. அரசாங்க ஆதரவு உண்டு.
கவனம்தேவை: அஷ்டமஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதை மறந்து விட வேண்டாம். 12க் குரிய செவ்வாய் மற்றும் ஐந்துக்குரியவர் பாதிப்படைந்து இருப்பதால் பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சில கவலைகள் இருக்கும். விரயஸ்தானத்தில் புதன் இருப்பதால் மனம் தளரும். சில பொருள்கள் இழப்பு ஏற்படும். நான்காம் இடத்தில் ராகு இருக்கின்றார். வண்டி வாகனங்கள் செலவு வைக்கும். தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை.
பரிகாரம்: 6ல் குரு என்பதால் வியாழக்கிழமை அருகில் உள்ள சிவாலயம் செல்லுங்கள். சிவன், அம்பாள், விநாயகர், முருகன் இவர்களை வலம் வந்து வணங்குங்கள்.