(11.12.2025 முதல் 17.12.2025 வரை)
சாதகங்கள்: வெற்றிக்குரிய இடமாகிய ஆறாம் இடத்தில் சனி ராகுவோடு தொடர்பு கொண்டிருப்பதால், எதிலும் வெல்லும் ஆர்வமும் செயல்படும் ஆர்வமும் தூக்கி நிறுத்தும். மனத்தளர்ச்சி இல்லாமல் செயல்படும் வாய்ப்பினை கிரகங்கள் வழங்குவதால், பயன்படுத்திக் கொள்ளுங்கள். லாபஸ்தான குரு பொருளாதார நிலையை உயர்த்தும். மூன்றாம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்திருப்பதால், எந்தக் குறையும் இல்லை. பொருளாதாரம் சிறப்பாகவே இருக்கும். பணத் தொல்லைகள் இருக்காது. எதையும் திட்டமிட்டுச் செய்து வெற்றி காண்பீர்கள். சுபகாரிய முயற்சிகள் பலன் தரும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கடன் சுமை குறையும். வெளிநாட்டு வேலை பெரும் முயற்சிகள் பலன் தரும்.
கவனம்தேவை: மூன்றாம் இடத்தில் ராசிநாதன் புதன் அமர்ந்திருப்பதால், சில நேரங்களில் எதைச் செய்யக் கூடாதோ அந்த காரியத்தைச் செய்து ‘‘இப்படி செய்து விட்டோமே’’ என்று வருத்தப்படுவீர்கள். எதையும் யோசனை செய்து காரியமாற்றுங்கள். மூன்றாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு சூரியன் சென்று விடுவதால், பிறருடன் வீண் பகை பொல்லாப்பு ஏற்படலாம். பழக்கவழக்கங்களில் கவனம் தேவை.
பரிகாரம்: வராகி அம்மனை வழிபடுங்கள் வாழ்வில் வெற்றி கிடைக்கும்.
