×

துலாம்

(11.12.2025 முதல் 17.12.2025 வரை)

சாதகங்கள்: ராசிநாதன் தன குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் அவரோடு பாக்யாதிபதி புதன் அமர்ந்திருப்பதும் சாலச் சிறந்த பலன்களைத் தரும். வெற்றியைத் தரும் சூரியன் 3ம் இடத்தில் செவ்வாயோடு இணைந்து அமர்ந்து பாக்கியஸ்தானத்தைப் பார்ப்பதால், மிகச் சிறந்த நன்மைகளை அடையலாம். பொருளாதார உயர்வு, வழக்கில் வெற்றி சகோதரர்களின் உதவி முதலிய விஷயங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து வெற்றிக்கு உதவும். சனி வக்கிர நிவர்த்தி பெறுவதால், சொத்து வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். குரு வக்ரம் பெற்றிருப்பதால், தொழில் முயற்சிகளில் திடீர் மாற்றங்கள் வரலாம். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்பினைப் பெறுவார்கள்.

கவனம் தேவை: விரயாதிபதியாகவும் புதன் இருந்து, அவர் இரண்டில் இருப்பதால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு சேமிப்பைக் கரைக்கும். உத்யோகத்தில் மாற்றங்கள் ஏற்படும். அது இடமாற்றமாக இருக்கலாம். பதவி மாற்றமாகவும் இருக்கலாம். தசாபுத்திகள் சரியாக இருந்தால் பதவி உயர்வுகளும் தசாபுத்தி சாதகம் இல்லை என்றால் இடமாற்றத்தால் மனக்கசப்பும் வரலாம்.

பரிகாரம்: வாரந்தோறும் சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வணங்கவும். வல்லமை கிடைக்கும்.

 

Tags :
× RELATED மீனம்