×

கும்பம்

16.1.2025 முதல் 22.1.2025 வரை

சாதகங்கள்: லாபஸ்தானத்தில் புதன் இருப்பது நல்ல அமைப்பு. ராசியில் சுக்கிரன் அமைந்திருப்பதும், பொருளாதார முன்னேற்றத்தையும், மகிழ்ச்சியான மனநிலையையும், செயல் ஊக்கத்தையும் காட்டுகிறது. ஓரளவு இந்த வாரம் அதிக சிரமம் இன்றி இனிமையாகவே செல்லும் என்பதற்கான கிரக நிலைகள் அமைந்திருக்கின்றன. கொடுத்த கடன்கள் வசூல் ஆகிவிடும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் உண்டு. கலைத்துறை சாதகமாக இருக்கும்.

கவனம் தேவை: ஆண்டு கிரகங்களான குரு, சனி, ராகு, கேது முதலியவைகள் சாதகம் இல்லாமல் இருப்பதால் நீண்ட கால திட்டங்களையும் முதலீடுகளையும் இப்பொழுது போடுவது உசிதமல்ல. செவ்வாய் வலிமை இன்றி இருப்பதால், மன அழுத்தமும் குழப்பமான சிந்தனைகளும் தலைதூக்கும். அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு தைரியமாக செயல்பட வேண்டும். சகோதர உறவுகளில் மிகுந்த கவனம் தேவை. குறிப்பாக ராசிநாதன் சனியை, செவ்வாய் பார்ப்பது சிறப்பல்ல.

சந்திராஷ்டமம்: 18.1.2025 இரவு 9.29 மணி முதல் 21.1.2025 காலை 10.03 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மர் வழிபாடு நலம் கொடுக்கும் மனதில் தைரியத்தைத் தரும்.

Tags :
× RELATED மீனம்