16.1.2025 முதல் 22.1.2025 வரை
சாதகங்கள்: ஐந்தாம் இடத்தில் குரு இருப்பதும், அவர் ராசியைப் பார்ப்பதும், ராசியில் இருக்கக்கூடிய சூரியனின் வெப்பத்தைக் குறைக்கும். இரண்டாம் இடத்தில் அமர்ந்து இருக்கக்கூடிய சுக்கிரன் யோகத்தை வழங்குவார். பொருளாதாரம் முன்னேற்றமாகவே இருக்கும். குடும்ப உறவுகள் சரியாகவே இருக்கும். கொஞ்சம் கவனமாகவும், மென்மையாகவும் பேசினால், மிக எளிதாக உங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய ஏற்பாடுகள் சுமுகமாகவே இருக்கும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். கலைத்துறையினர் ஓரளவு ஆதாயத்துடன் தொழில் நடத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கவனம் தேவை: வாய்ப்புகளும், பொருளாதாரமும் ஒரு கட்டுக்குள்தான் இருக்கும். அதிர்ஷ்டத்தைவிட உழைப்பை நம்ப வேண்டிய வாரம் இந்த வாரம். உணவு விஷயத்தில் மிகுந்த கட்டுப்பாடு தேவை. சரும வியாதிகள் தலைதூக்கும். கண் எரிச்சல், தலைவலி முதலிய பிரச்னைகள் அதிகரிக்கும்.
சந்திராஷ்டமம்: 16.1.2025 காலை 11.17 மணி முதல் 18.1.2025 இரவு 9.28 மணி வரை சந்திராஷ்டமம் உண்டு. சந்திராஷ்டம தினத்தில் பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட வேண்டாம்.
பரிகாரம்: சனிக்கிழமை நவகிரக சந்நதிக்குச் சென்று பிரதட்சணம் செய்து வாருங்கள். அங்குள்ள மூலமூர்த்தியையும் வணங்குங்கள். நன்மை கிடைக்கும்.