(11.12.2025 முதல் 17.12.2025 வரை)
சாதகங்கள்: பத்தாம் இடத்தில் வார மத்தியில் சூரியன் செவ்வாயோடு இணைவது நற்காலம் மாக அமையும். தொழில் வளர்ச்சியும் உத்தியோக மேன்மையும் ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்க வாய்ப்புண்டு. மனதில் உற்சாகம் இருக்கும். உபரி வருமானத்தை பெறும் வழி சாத்தியமாகும் ராசிநாதன் பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து உங்கள் லாபஸ்தானத்தைப் பார்ப்பதோடு ராசியையும் பார்ப்பது சிறப்பு. சனி வக்கிர நிவர்த்தி பெறுவதால் செலவுகள் நல்லபடியாகவே நடை பெறும். வீட்டுக்குத் தேவையான நல்ல பொருள்களை வாங்குவீர்கள். 4,7க்குரிய புதன் பாக்கியஸ்தானத்தில் சுக்கிரனோடு அமர்ந்திருப்பதால், பத்திரிகைத்துறை, தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகளும் பதவி உயர்வுகளும் கிடைக்கும்.
கவனம்தேவை: பன்னிரண்டாம் இடத்தில் இருக்கும் கிரகங்களால் அலைச்சலும் சில நேரங்களில் நிம்மதிக் குறைவும் ஏற்படும். அவர்கள் சற்று விழிப்புணர்வுடன் தங்கள் திட்டங்களை வகுத்துக் கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: 14.12.2025 இரவு 9.42 முதல் 17.12.2025 காலை 10.26 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் விரதம் இருங்கள். லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.
