(11.12.2025 முதல் 17.12.2025 வரை)
சாதகங்கள்: ஐந்தாம் இடத்தில் இருந்த சூரியன் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி ஆறாம் இடத்திற்கு மாறுவது சிறந்த வெற்றியைத் தரும். குழப்பங்கள் மாறும். செவ்வாயும் இணைந்து இருப்பதால் புதிய முயற்சிகள் உங்களை நோக்கி வரும். அவற்றை தைரியத்தோடு ஏற்றுக் கொண்டு முன்னேறுவீர்கள். குருவின் பார்வை ஐந்தாம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய இடம் பலம் பெற்று உங்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்து தரும். பூர்விகம் சென்று வரவும் குலதெய்வ பூஜை செய்யவும் மனதில் எண்ணம் தோன்றும். சுக்கிரன் ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருப்பதால், சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெற்று வீட்டில் மங்கல ஓசை கேட்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் இணக்கமாக இருந்து உதவுவார்கள். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் அகலும்.
கவனம் தேவை: ஐந்தாம் இடத்தில் புதன் அமர்ந்திருப்பதால், பிள்ளைகளால் சில கவலைகளும் தொல்லைகளும் உண்டு. சிலர் எதிர்பாராத அவமானத்தைச் சந்திக்க வேண்டி இருக்கும். வெளியில் சொல்ல முடியாமல் சில விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு புழுங்குவீர்கள். வீட்டுப் பத்திரம் முதலிய முக்கியமான ஆவணங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடும் மிக முக்கியம்.
