16.1.2025 முதல் 22.1.2025 வரை
சாதகங்கள்: தை மாதம் முழுக்க சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்துப் பிரவேசம். உங்கள் முயற்சியை வெற்றிகரமாக மாற்றித் தரும். இதுவரை தாமதமான சில செயல்கள் பூர்த்தியாகும். நவீன கருவிகளை வாங்குவீர்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி செய்வார்கள். நண்பர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். வெகு விரைவில் புதனும் சூரியனோடு சென்று மிதுன ராசியில் இணைவதால், யோகங்கள் ஏற்படும். அரசாங்க காரியங்கள் வெற்றிகரமாக முடியும். செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு.
கவனம் தேவை: ஏழாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதும், சனியோடு சேர்ந்திருப்பதும், செவ்வாய் அவரைப் பார்ப்பதும், உடல் ரீதியான பிரச்னைகளைக் கொடுக்கும். குறிப்பாக, கணவன் மனைவி இருவருக்குள்ளும் மனச்சங்கடங்கள் ஏற்பட்டு, குடும்ப அமைதி குறையலாம். கவனம் தேவை. அஷ்டம ராகுவும் இரண்டாம் இடத்தில் உள்ள கேதுவும் இதை உறுதி செய்கின்றன. பேச்சில் கவனம் தேவை.
பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கையை வணங்குவதன் மூலமாக இந்தத் தொல்லைகளைக் குறைத்துக் கொள்ளலாம்.