ஜாக்கி சான் நடித்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’ என்ற படம், வரும் 30ம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் திரைக்கு வருகிறது. ‘கராத்தே கிட்’ என்ற படத்தின் 2வது பாகமான இதில் ரால்ஃப் மாக்கியோ மீண்டும் டேனியல் லாருசோ கேரக்டரில் நடித்துள்ளார். அவர் கூறுகையில், ‘இந்த தொடரையும், கேரக்டரையும் பாதுகாப்பதில் நான் அதிக கவனத்துடன் செயல்படுகிறேன். கேரக்டரின் வளர்ச்சியும், முதல் படத்தின் கருவும் பல தலைமுறைகளையும் தாண்டி வென்றுகொண்டே இருக்கின்றன. படப்பிடிப்பு தளத்தில் ஜாக்கி சானுடன் இணைந்து பணியாற்றுவது என்பது, நாள்தோறும் புதிது புதிதாக கற்றுக்கொள்ளும் ஒரு பேரனுபவமாகும்.
அவர் மீது எனக்கு அதிக மரியாதை இருக்கிறது. சினிமா மற்றும் பல்வேறு கலைகளில் சிறந்து விளங்குகின்ற உன்னத மனிதரான அவர், மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் நகைச்சுவை காட்சிகளில் அதிக ஈடுபாடு காட்டுவார். அவரது பாணியை யாராலும் பின்பற்ற முடியாது. அதனால்தான் அவர் சொல்வதற்கு எல்லாம் மறுப்பு எதுவும் சொல்லாமல், அப்படியே கேட்டு நடக்கிறேன். லி ஃபாங் கேரக்டரில் நடிக்கும் பென் வாங்கின் கடுமையான உழைப்புக்கு பாராட்டுகள். அவர் இந்த தலைமுறையின் கராத்தே கிட் ஆக இருக்கிறார்’ என்றார்.