சாந்தனு, அஞ்சலி நாயர் நடிக்கும் மெஜந்தா

சென்னை: பிராண்ட் பிளிட்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டாக்டர் ஜே.பி.லீலா ராம், ரேகா லீலா ராம் மற்றும் கே.ராஜூ தயாரிக்க, ‘இக்லூ’ பரத் மோகன் எழுதி இயக்கும் படம், ‘மெஜந்தா’. சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர், ‘படவா’ கோபி, ஆர்ஜே ஆனந்தி, பக்ஸ் உள்பட பலர் நடிக்கின்றனர். படம் குறித்து தயாரிப்பாளர்கள் கூறுகையில், ‘காதல், காமெடி மற்றும் விஷூவலாக ‘மெஜந்தா’ படம் சிறப்பாக உருவாகிறது. பரத் மோகன் சொன்ன கதையை நாங்கள் விஷூவலாக பார்க்க முடிந்தது.

அழகான சினிமாட்டிக் ஃபீல்குட் எண்டர்டெயினர் கதையாக இருக்கும். ’அவள் சூரிய உதயம், அவன் அந்தி சாயும் நேரம். இருவரும் ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள். ஆனால், பிரபஞ்சம் அந்த நிழலை ஒரே புள்ளியில் இணைக்கிறது’ என்ற தீம்தான் படம்’ என்றனர். பல்லு ஒளிப்பதிவு செய்ய, தரண் குமார் இசை அமைக்கிறார். பவித்ரன் எடிட்டிங் செய்ய, பிரேம் அரங்குகள் அமைக்கிறார். சக்தி சரவணன் சண்டைப் பயிற்சி அளிக்கிறார். படப்பிடிப்பு நடந்து வருகிறது.

 

Related Stories: