உங்க கலருக்கு மாற என்ன செய்யணும்?… ரசிகரின் கேள்விக்கு தமன்னா பளிச் பதில்

சென்னை: நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமன்னாவிடம் உங்களை மாதிரி மில்கி ஒயிட்டாக இருக்க என்ன செய்ய வேண்டும் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு தமன்னா அளித்த பதில் அனைவரையும் கவர்ந்தது. தமன்னா கூறியதாவது: உங்களின் கலர் தான் நம் நாட்டின் கலர். நான் இந்த நாட்டில் தான் இருக்கிறேன். ஆனால் ஃபிட் ஆக முயற்சி செய்கிறேன். சில படங்களில் மூன்று மணிநேரம் மேக்கப் போட்டு உங்களின் கலராக முயற்சி செய்கிறேன். உங்களுக்கு நல்ல கலர் இருக்கு. குறிப்பாக எனக்கு இந்த கலர் ரொம்ப பிடிக்கும் என்றார்.

கேள்வி கேட்ட ரசிகர் மாநிறத்தில் இருந்தார். தமன்னா சொன்னதை கேட்டு அவருக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. தனக்கு மாநிறம் தான் பிடிக்கும் என தமன்னா சொன்னது பற்றி தற்போது பேசப்படுகிறது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Related Stories: