உலகமே செயற்கை நுண்ணறிவுக்கு (AI) அடிமையாகி இருக்கிறது. அதன் பெயர் என்டிடி . அதனைக் கட்டுப்படுத்தும் ப்ராசஸர் ஆழ்கடலில் மூழ்கிக் கிடக்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கிறது. அதனைத் திறக்கும் சாவியைத் தேடும் பயணமாக இதற்கு முந்தைய பாகம் இருந்தது. தொடர்ந்து ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கும் ப்ராசஸரை எடுத்து ப்ராசரை பொருத்தினால் செயற்கை நுண்ணறிவை கட்டுக்குள் கொண்டு வர முடியும். இல்லையேல் உலகின் அணு ஆயுதங்கள் அத்தனையும் செயல்படத்துவங்கி உலகமே அழிந்துவிடும். இந்த சம்பவத்தை நிறுத்த ஈதன் ஹன்ட் ( டாம் குரூஸ்) அவருடைய நண்பர்களான பென்ஜி (சைமன் பெக்), லூத்தர் (விங் ரேம்ஸ்), கிரேஸ் (ஹேலி ஹெட்வெல்) இணைந்த ஏஜென்ட் குழு களம் இறங்குகிறது. கடைசி மிஷனை எப்படி முடித்தது இந்த சீக்ரெட் குழு என்பது தான் கதை.
வழக்கம் போலவே ஆக்சன் அதிரடி மாஸ் என இந்த வயதிலும் உலகையே ஆச்சரியப்படுத்துகிறார் டாம் குரூஸ். இந்தப் படத்திலும் அப்படித்தான். உடன் அவருக்கு பக்கபலமாக விங் ரேம்ஸ், ஹேலி ஹெட்வெல், சைமன் பெக் உள்ளிட்டோர்.
எம்ஐ பாகங்கள் என்றாலே அனல் பறக்கும் ஆக்சன் தான் தீம். ஆனால் இந்த படத்தில் அந்த ஆக்சன் சற்றே குறைவாக இருக்கிறது. நிறைய டெக்னிக்கல் கருவிகள் அதற்கு வகுப்புகள் என இந்த படம் நிறைய வசனங்கள் நிறைந்த திரைக்கதையாக கடந்து செல்கிறது. மிஷன் இம்பாசிபிள் பாகங்கள் விரும்பிகளுக்கு இந்த பாகம் சின்ன ஏமாற்றமாக இருக்கலாம் . ஆனால் படம் முழுக்க உணர்வுகள் குவிந்து கிடக்கின்றன.
மொத்தத்தில் இந்த மிஷன் இம்பாசிபிள் : தி ஃபைனல் ரெக்கனிங் எம்ஐ ரசிகர்களுக்கு ஃபைனல் விருந்து. எனவே நிச்சயம் அனைவரும் பார்த்தே ஆக வேண்டிய படமாக மாறி இருக்கிறது.