டிடி நெக்ஸ்ட் லெவல் இயக்குனர் சினிமாவை விமர்சித்து சிக்கலில் தவிக்கும் சந்தானம்

சென்னை: சந்தானம் நடித்த ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் ஹிட்டானது. அதை இயக்கிய பிரேம் ஆனந்த், தற்போது ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்கியுள்ளார். சந்தானம், கீத்திகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, மாறன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடித்துள்ளனர். தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்ய, ஆஃப்ரோ இசை அமைத்துள்ளார். நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஆர்யா, சந்தானம் இணைந்து தயாரித்துள்ளனர். வரும் மே 16ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து பிரேம் ஆனந்த் கூறியதாவது: சொகுசு கப்பலில் தொடங்கும் கதை தீவில் முடிகிறது.

பல கோடி ரூபாய் செலவில் கப்பலை வாடகைக்கு எடுத்து, மொரீஷியஸ் வரை சென்று படமாக்கினோம். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் அடுத்த கட்டமே ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. கதையில் அதற்கும், இதற்கும் தொடர்ச்சி இருக்காது. சந்தானம் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது. ‘சினிமாவை பற்றி விமர்சிக்கும் யூடியூபர் கேரக்டரில் சந்தானம் நடித்துள்ளார். விமர்சனத்தால் அவர் எதிர்பாராத பிரச்னையில் சிக்கி தவிக்கிறார். பிறகு எப்படி மீள்கிறார் என்பது கதை.

Related Stories: