10 மணி நேரத்தில் கொலையாளியை கண்டுபிடிக்கும் கதையில் சிபிராஜ்

சென்னை: இளையராஜா கலியபெருமாள் எழுதி இயக்கிய கிரைம் திரில்லர் படமான ‘டென் ஹவர்ஸ்’, வரும் 18ம் தேதி திரைக்கு வருகிறது. பைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். டுவின் ஸ்டுடியோஸ் சார்பில் லதா பாலு, துர்காயினி வினோத் தயாரித்துள்ளனர். சிபிராஜ், சரவணன், கஜராஜ், ராஜ் ஐயப்பா, தங்கதுரை, குரேஷி, முருகதாஸ், ஷாரு மிஷா நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்க, கார்த்திக் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்ய, அருண் சங்கர் துரை அரங்கம் அமைத்துள்ளார். சக்தி சரவணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். படம் குறித்து இளையராஜா கலியபெருமாள் கூறியதாவது: மாலை அணிந்து விரதம் இருந்த போலீஸ் அதிகாரி சிபிராஜ், அன்று சபரிமலைக்கு புறப்படுகிறார்.

அப்போது சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் ஆம்னி பேருந்தில் ஒரு கொலை நடக்கிறது. செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது என்பது கதை. குற்ற சம்பவத்தை விசாரிக்கும் சிபிராஜ், திட்டமிட்டபடி சபரிமலைக்கு சென்றாரா என்பது மீதி கதை. ஒரு இரவு, ஒரு பேருந்து, ஒரு கொலை, 25 பயணிகள் என்பதே ‘டென் ஹவர்ஸ்’சின் கதைக்களம். பஸ்சில் பயணித்த 25 பேரில் ஒருவரே கொலையாளி. அவர் யார், எதற்காக கொலை நடந்தது என்பதை சிபிராஜ் 10 மணி நேரத்தில் கண்டுபிடிக்கிறார். கிளைமாக்ஸ் யூகிக்க முடியாததாக இருக்கும். சிபிராஜூக்கு ேஜாடி இல்லை. ராஜ் ஐயப்பா, ஷாரு மிஷா ேஜாடியாக நடித்துள்ளனர். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

Related Stories: