அன்டில் டவுன் விமர்சனம் (ஆங்கிலம்)

கடந்த 2015ல் வெளியான `அன்டில் டான்’ வீடியோ கேமை மையப்படுத்தி, அதே தலைப்பில் ஒரு சர்வைவல் ஹாரர் திரைப்படத்தை இயக்கியுள்ளார், டேவிட் எஃப் சாண்ட்பெர்க். காட்டிலுள்ள பள்ளத்தாக்கில் மாயமான தனது சகோதரி மெலானியை (மையா மிட்செல்) தேடி க்ளோவர் (எல்லா ரூபின்) மற்றும் அவரது 4 நண்பர்கள் செல்கின்றனர். அப்போது ஒரு அமானுஷ்ய சக்தியை உணர்கின்றனர்.

பிறகு ஒரு வீட்டில் மெலானியை தேடும்போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். பிறகு 5 பேரும் ஒரு டைம் லூப்பில் சிக்குகின்றனர். ஒவ்வொரு லூப்பிலும் வெவ்வேறு அமானுஷ்ய விஷயங்களால் 5 பேரும் கொல்லப்படுகின்றனர். அன்று இரவை கடந்து விடியலை தொடுவது ஒன்றே அவர்கள் தப்பிப்பதற்கான வழி. மீண்டும், மீண்டும் கொல்லப்படும் 5 பேர் எப்படி தப்பித்தனர், மெலானிக்கு என்ன நடந்தது என்பது படம்.

தனது சகோதரியை தேடி காட்டுக்குள் செல்லும் எல்லா ரூபின், பரபரப்பாக நடித்து கவனத்தை ஈர்க்கிறார். அவரது நண்பர்களாக வரும் மைக்கேல் சிமினோ, ஓடெஸா அசீயான், ஜி யங் யூ, பெல்மோன்ட் கேமலி ஆகியோர், பயத்தை அற்புதமாக கடத்தி இருக்கின்றனர். பீட்டர் ஸ்டோட்மேர், மயா மிட்செல் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர்.

திகில் படம் என்பதால், ஒளிப்பதிவாளர் மாக்ஸிம் அலெக்சாண்டர் கடுமையாக உழைத்துள்ளார். அவருக்கு ஈடுகொடுத்து எடிட்டிங் செய்துள்ளார், மைக்கேல் அலர். இசையமைப்பாளர் பெஞ்சமின் வால்ஃபிஷ், தனது பின்னணி இசையின் மூலம் மிரட்டி இருக்கிறார். ஒரே இரவில் நடந்து முடியும் மர்மங்கள் நிறைந்த கதையில், டைம் லூப் என்ற சுவாரஸ்யத்தை இணைத்து, பார்வையாளர்களை பயமுறுத்தி இருக்கின்றனர்.

Related Stories: