இப்பட விழாவில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேசும்போது, ‘‘சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா? அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு. இது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும். பாரதிக்கு வாழ்த்துக்கள்’’ என்றார்.
சிறு பட்ஜெட்டில் நல்ல படம் எடுங்க: புதுமுக இயக்குனர்களுக்கு பி.சி.ஸ்ரீராம் அட்வைஸ்

- பி. சி. ஸ்ரீராம் ஆலோசனை
- சென்னை
- திரு
- ஜீவா
- ஹரிஷா
- பிரபு ஷஸ்தா
- இந்திரன்
- பாரதி
- சாலமன் போஸ்
- சருலதா பிலிம்ஸ்