டாம் குரூஸ் நடிப்பில் “மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெகனிங்” இந்தியா ரிலீஸ் தேதி!

ஹாலிவுட் அதிரடி நடிகர் டாம் குரூஸ் நடித்துள்ள “மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெகர்னிங்” திரைப்படம் உலக ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஃபிரான்சைஸ். கிரிஸ்டோபர் மெக்வாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், முன்னதாக ‘ டெட் ரெகானிங் பாகம் 1 ‘ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது, புதிய தலைப்புடன் வெளியாவதற்கு தயாராகியுள்ளது.
இந்திய ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு செய்தியாக உலகளாவிய ரிலீஸ்க்கு முன்பாகவே இந்தியாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட இருக்கிறது. இந்தியாவில் 2025 மே 17 அன்று “மிஷன் இம்பாசிபிள்: தி ஃபைனல் ரெகர்னிங்” திரையிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். மற்ற நாடுகளில் மே 23 அன்று வெளியாக இருக்கிறது.

இத்திரைப்படம், மிஷன் இம்பாசிபிள் தொடரின் எட்டாவது மற்றும் இறுதி பகுதியாகும். டாம் குரூஸ், ஹெய்லி அட்வெல், சைமன் பெக், வானெஸா கெர்பி, ஹென்றி செர்னி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். புதிய நடிகர்களாக ஹன்னா வாடிங்காம் மற்றும் நிக் ஆஃபர்மேன் சேர்க்கப்பட்டுள்ளனர். சுமார் 400 மில்லியன் செலவில் உருவான இந்த திரைப்படம், தற்போது வரை இந்த தொடரில் மிக அதிகபட்ச பட்ஜெட்டில் உருவான படமாகும். இந்த திரைப்படம் 2025 மே 14 அன்று பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் உலகத் துவக்க நிகழ்வை கொண்டாட உள்ளது. தற்போது வெளியான டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் படம் வெளியிடப்பட உள்ளது.

Related Stories: