காஷ்மீர் தாக்குதல் சம்பவம்: சாதி, மத பேதமின்றி மக்கள் வாழ வேண்டும்: அஜித் குமார் பேட்டி

புதுடெல்லி: 2025ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. மொத்தம் 139 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முதற்கட்டமாக 71 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், அஜித்குமார் பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து, அவர் அளித்த பேட்டியில், ”காஷ்மீர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை எண்ணி நான் வருந்துகிறேன்.

இந்த விவகாரத்தில் அரசு தன்னால் முடிந்ததை நிச்சயம் செய்யும் என்று நம்புகிறேன். இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று நான் பிரார்த்திக்கிறேன். இந்த சூழலில், சாதி மத பேதமின்றி நல்லிணக்கமாக எப்படி வாழ்வது என்பதை நாம் கற்றுக் கொள்ளவேண்டும். நமக்குள் எந்த மோதலும் இருக்க கூடாது. அமைதியாகவும், ஒற்றுமையாகவும் நாம் வாழ வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: