திரை வாரிசுகள் உருவாக்கிய கன்னி

சென்னை: ரெட் பேர்ட் புரொடக்‌ஷன் சார்பில் நடிகர் அம்சவர்தன் மகள் அனன்யா தயாரித்துள்ள குறும்படம், ‘கன்னி’. தயாரிப்பாளர் சரவணன் மகள் கரீஷ்மா எழுதி இயக்கியுள்ளார். ராம் நிஷாந்த், மிருதுளா, ரியா நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுக விழாவில் அம்சவர்தன், ‘கயல்’ சந்திரன், விதார்த், ஒளிப்பதிவாளர் கிச்சா, இசை அமைப்பாளர் தேஜஷ் கிருஷ்ணா, எடிட்டர் அருண் குமார், ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன், விநியோகஸ்தர் கோகுல், இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கலந்துகொண்டனர்.

அப்போது கரீஷ்மா பேசியதாவது:
சினிமாவில் நானும் சாதிப்பேன் என்று நம்பிய எனது பெற்றோருக்கும், அனன்யாவுக்கும், அம்சவர்தனுக்கும் நன்றி. கடந்த 1990கள் பின்னணியில் ஒரு பெண் சந்திக்கும் பிரச்னைகளை மையப்படுத்திய இக்கதையில், நிறைய காட்சிகளுக்கு உயிர் கொடுத்தது தேஜஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு எனலாம். இப்படம் Moviebuff ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

Related Stories: