தேனி, மே 3: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் சங்கத்தின் சார்பில், நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாந்தியம்மாள் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வனிதா முன்னிலை வகித்தார்.
கோரிக்கைகளை விளக்கி மாநில துணை செயலாளர் நாகலட்சுமி, சிஐடியு மாவட்ட தலைவர் ஜெயபாண்டி, மாவட்ட செயாளர் சண்முகம் ஆகியோர் பேசினர். போராட்டத்தின்போது, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், மே மாதம் முழுவதும் கோடை கால விடுமுறை அளிக்க வேண்டும், ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
The post கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் appeared first on Dinakaran.