வரும் 26ந் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் கலெக்டர் தகவல்

 

கரூர், மே. 23: கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் : எரிவாயு நுகர்வோர்களுக்கும், மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காணப்படும், குறைகள் மற்றும் நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது முகவர்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வரப்பெறும் புகார்களின் மீது நடவடிக்கை மேற்கொண்டு எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எரிவாயு உருளைகள் விநியோகத்தை சீர்படுத்த வசதியாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளர்களுடன் கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மே 26ம்தேதி மாலை 4 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, எரிவாயு நுகர்வோர்கள் இந்த நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

The post வரும் 26ந் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: