அருமனை, மே 3: அருமனை ஜங்ஷன் பகுதியில் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நிமிர் என்ற தலைப்பில் தீவிர போக்சோ குற்ற விழிப்புணர்வு பிரச்சார இயக்க நிகழ்ச்சி நடந்தது. தக்கலை எஸ்எஸ்ஐ புஷ்பா மேரி தலைமையில் போலீசார் பெண்கள் மற்றும் பொதுமக்களின் செல்போன்களில் காவலர் உதவி என்ற செயலியை பதிவிறக்கம் செய்து அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு பிரசுரங்களையும் வழங்கினர்.
The post அருமனையில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.