அப்போது அவர் ஆற்றிய உரையில்,
‘இந்திய தேர்தல் முறையில் நிறைய பிரச்னைகள் உள்ளன. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் வாக்கு எண்ணிக்கையை விட அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற சம்பவம் நடந்தது உண்மை. தலைமை தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு நாளான்று மாலை 5.30 மணி வரையிலான வாக்குப்பதிவு தரவுகளை வெளியிட்டது. ஆனால் மாலை 5.30 முதல் 7.30 மணி வரை வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய நேரத்தில், 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற நிகழ்வு நடப்பதற்கு சாத்தியமே இல்லை.
ஏனெனில், ஒரு வாக்காளர் வாக்களிக்க சுமார் 3 நிமிடங்கள் ஆகும். இதை கணக்கிட்டால், அன்றிரவு 2 மணி வரை வாக்காளர்கள் வரிசையில் நின்று, இரவு முழுவதும் வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக கூறப்படும் நிகழ்வை வீடியோ பதிவு செய்யப்பட்டதா? என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம். அவர்கள் வீடியோ பதிவை தர மறுத்தது மட்டுமல்லாமல், சட்டத்தையே மாற்றிவிட்டனர். தேர்தலை நடத்துவதில் ஏதோ மிகப்பெரிய தவறு உள்ளது என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டோம். இதுகுறித்து பகிரங்கமாக பொதுவெளியில் கூறியுள்ளோம்’ என்று கூறினார்.
The post இந்திய தேர்தல் முறையில் நிறைய பிரச்னைகள் இருக்கு..! அமெரிக்காவில் ராகுல் காந்தி விமர்சனம் appeared first on Dinakaran.