பெண் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

கோவை: கோவை விமான நிலையத்துக்கு சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டில் தேனிலவு முடித்துவிட்டு புதுமண தம்பதி வந்தனர்.  அங்கு காத்திருந்த ஒரு இளம்பெண் அந்த புதுமாப்பிள்ளையிடம் தகராறில் ஈடுபட்டார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக புதுமாப்பிள்ளை மீது அந்த இளம்பெண் குற்றம்சாட்டினார்.
அந்த புதுமாப்பிள்ளை தனது மனைவியுடன் அங்கிருந்து சென்றுவிட்டார்.

விமான நிலையத்தில் இளம்பெண் ரகளை செய்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. முன்னதாக இளம்பெண் புது மாப்பிள்ளை மீது கோவை கிழக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இன்ஸ்பெக்டர் ருக்மணி புது மாப்பிள்ளைக்கு ஆதரவாக செயல்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவரை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

The post பெண் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: