காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்!.. பலியானவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்: கீ.வீரமணி

சென்னை: காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்!. பலியானவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்.

காஷ்மீர் பகுதியில் சற்றும் எதிர்பாராமல் நடைபெற்ற தீவிரவாதக் கும்பலின் திடீர் தாக்குதல் முறையற்றது; மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது; சுற்றுலா சென்ற பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முற்றிலும் கோழைத்தனமானது.இதனை ஒன்றிய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிட வேண்டும்.

கருநாடகத் தொழிலதிபர் உள்பட இந்தியர்கள், வெளிநாட்டவர் என சுற்றுலாவிற்குச் சென்றவர்களின் நிலை இப்படியா ஆவது? தமிழ்நாட்டவர் காயமாக்கப்பட்டுள்ளனர். ஈவு இரக்கமற்ற மக்கள் விரோதக் கும்பலின் இம்மாதிரிக் கொடூரமான செயல் – இதுவே கடைசி முறையாக அமைய வேண்டும். உயிர் இழந்தவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும், அவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதில் கட்சி, அரசியல், எந்த வேறுபாடும் இன்றி ஒருங்கிணைந்து கண்டனக் குரல் எழுப்பிட வேண்டும்.
மனித உயிர்களுக்கு இப்படியா ஒரு நிலை ஏற்படுவது? இது வெட்ககரமானது, வேதனையானது!. இவ்வாறு தெரிவித்தார்.

The post காஷ்மீர் தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும்!.. பலியானவர்களுக்கு நமது ஆழ்ந்த இரங்கல்: கீ.வீரமணி appeared first on Dinakaran.

Related Stories: