தற்போது கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் இவ்வழியாக வரும் சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த ஆண்டு கோடை சீசனில் முதல் முறையாக மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை,’ மலைப்பயிர்கள் கண்காட்சி காட்டேரி பூங்காவில் நடக்கவுள்ளது.
இதற்காக தேயிலை, காபி, ரப்பர் போன்ற பணப்பயிர்கள் மற்றும் தேங்காய், பனை, நுங்கு, இளநீர், கொக்கோ, பாக்கு உட்பட பல்வேறு வகை பயிர்களும், அலங்கார வடிவமைப்புகள் மேற்கொள்ள தோட்டக்கலை துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் மலைபயிர்கள் கண்காட்சிக்காக அலங்கார பணிகள் மேற்கொள்வதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையை சேர்ந்த மலர் நாற்றுகள் வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதனை பாதுகாக்கும் பணிகளில் தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கோடை சீசன் நெருங்கி வரும் சூழலில் காட்டேரி பூங்கா பசுமைக்கு திரும்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது என்பதும் குறிப்பிடதக்கது.
The post காட்டேரி பூங்காவில் அலங்காரம் செய்ய தயார் நிலையில் 1,000 பூந்தொட்டிகள் appeared first on Dinakaran.