சென்னை: மருத்துவப்படிப்பில் 7.5% இடஒதுக்கீடு பேரவையில் காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. ‘அதிமுக ஆட்சியில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என போராட்டம் நடத்தியது திமுக என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வரவேண்டும் என்று போராட்டம் நடத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை அனைவரும் அறிவார்கள். 7.5 சதவீதம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. திமுக சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு ஆளுநருக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் கண்டனம் தெரிவித்தனர்’ என சட்டப்பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.
The post மருத்துவப்படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: பேரவையில் காரசார விவாதம் appeared first on Dinakaran.