தொடர்ந்து, கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கிராம மக்களிடம் இதுகுறித்து எடுத்துக்கூறி மயான பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போது டெண்டர் விடப்பட்டுள்ள சாலை பணிகளுக்கு இதற்கு முன்னரே மாவட்ட கலெக்டரிடம் ஒப்புதல் பெறப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்தனர்.
இதனை ஏற்க மறுத்த கிராம மக்கள் தங்களுக்கான சாலை பணிகள் முடிந்த பின்னரே இந்த பணிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு பணிகள் ஒப்புதல் பெறப்பட்டதன் அடிப்படையில் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அந்தந்த பணிகளையே செய்ய முடியும் என்பதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர்களுக்கான பணிகள் விரைவில் முடித்து தரப்படும் என்றும் அதிகாரிகள் சமாதானப்படுத்தினர். மேலும் இச்சம்பவம் குறித்தும் பிரச்னைகள் குறித்தும் பேரூராட்சிகளின் உயர் அலுவலர்களுக்கும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
The post சாலை அமைக்கக்கோரி பேரூராட்சி ஆபீஸ் முன்பு திரண்ட கிராம மக்கள் appeared first on Dinakaran.