குன்னம், ஏப்.12: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பஸ் நிலையம் அருகே கோடைகால நீர் மோர் பந்தலை பெரம்பலூர் மாவட்ட திமுக செயலாளர் ஜெகதீசன் முன்னிலையில் குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பழம், பானகம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மருவத்தூர் ராஜேந்திரன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, ஒன்றிய துணை செயலாளர் பாலுசாமி, ஞானசேகரன், உமா சந்தோஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குன்னம் பிரபாகரன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் குன்னம் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதிகள் தர்மராஜ், கதிரவன், புகழேந்தி, பொருளாளர் கண்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் கொளஞ்சிநாதன், வழக்கறிஞர் கவியரசு, முத்து செல்வன் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
The post குன்னம் பஸ் நிலையம் அருகே கோடைகால நீர் மோர் பந்தல் appeared first on Dinakaran.