பெரம்பலூர், ஏப்.24: பெரம்பலூரில் காந்தி சிலை, காமராஜர் வளைவு, சங்குப்பேட்டை பகுதிகளில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் என பெரம்பலூர் உதவி செயற் பொறியாளர் (நகரம்) முத்தமிழ் செல்வன் தெரிவித்தார். இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: துறைமங்கலம் மற்றும் நகர் பெரம்பலூர் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட வெங்கடேசபுரம், அபிராமபுரம் கிழக்கு மற்றும் மேற்கு, சுந்தர் நகர், விஐபி நகர், விளாமுத்தூர் ரோடு, சங்குப் பேட்டை, கம்பன்நகர், மேரிபுரம், காமராஜர் வளைவு, பூசாரித் தெரு, காந்தி சிலை, சிவன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், இன்று (24 ஆம் தேதி) வியாழக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும்.
பராமரிப்புப் பணிகள் முடிவடைந்தவுடன் சீரான மின்சாரம் வழங்கப் படும் என பெரம்பலூர் உதவி செயற் பொறியாளர்(நகரம்) முத்தமிழ் செல்வன் வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
The post பெம்பலூரில் இன்று மின்தடை appeared first on Dinakaran.