பெரம்பலூர், ஏப்.22: பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் 1.200 கிலோ குட்கா பொருட்கள் விற்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்க பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா பல்வேறு நடைவடிக்கைகள் மேற் கொண்டுவருகிறார். அதன்படி நேற்று (21ம் தேதி) பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தனிப்படையினர் நடத்திய சோதனையில், பெரம்பலூர் உட்கோட்டம் மங்களமேடு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட வாலிகண்டபுரம் கிராமத்தில் திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் கருப்பையா (50) என்பவர் தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருட்களை, சட்டத்திற்கு புறம்பாக வைத்து விற்றது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தனிப்படையினர் மற்றும் குழுவினர் கருப்பையாவை கைது செய்து, வழக்குப்பதிவு செய்து அவரிடமிருந்து 1.200 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல்செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுபோன்று கஞ்சா, குட்கா போன்ற அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்களைப் பற்றிய தகவல் தெரிந்தால், அருகில் உள்ள போலீஸ் ஸ்டேசனிலோ அல்லது மாவட்ட எஸ்பி அலுவலகத்திலோ தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் முகவரி உள்ளிட்ட விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என பெரம்பலூர் மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.
The post பெரம்பலூர் வாலிகண்டபுரத்தில் 1,200 கிலோ குட்கா வைத்திருந்தவர் கைது appeared first on Dinakaran.