பெரம்பலூர், ஏப்.29: தேவையூர் அருகே பைக்கில் சென்றவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர் கடலூர் மாவட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் 4ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாதுரை(48) என்பவர், நேற்று வேப்பந்தட்டை தாலுக்கா, மங்களமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எறையூர் சிப்காட் காலணி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் தனது மனைவியை வேலைக்கு சிப்காட்டில் விட்டு விட்டு, தனதுவீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தர். வரும் வழியில் தேவையூர் பிரிவு ரோடு அருகில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் மேற்படி அண்ணாதுரையை வழிமறித்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக அண்ணாதுரை அளித்த புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது. கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுக்கா, மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த தர்ம லிங்கம் மகன் உதயகுமார் (29), அதன் அருகே உள்ள இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் மகன் திருப்பதி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது.
The post பெரம்பலூர் அருகே பைக்கில் சென்றவரிடம் வழிப்பறி செய்தவர் கைது appeared first on Dinakaran.