அரியலூர், ஏப். 28: மணிமேகலை விருது பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் சிறப்பாக செயல்பட கூடிய சமுதாய அமைப்புகளுக்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் மணிமேகலை விருதுகள் (2024-2025) வழங்கப்படவுள்ளது. விருதுகள் பெற மூன்று ஆண்டுகளுக்கு மேல் சிறப்பான செயல்பாடுகளில் (வங்கி வரவு,செலவு, கடன் இணைப்பு, கடன் திருப்பம், ஆண்டு தணிக்கை, ஆண்டு புதுப்பித்தல், முறையான சேமிப்பு, சமுதாய செயல்பாடுகள், உணவு ஊட்டச்சத்து, ஆரோக்கியம், சுகாதாரம், மரம் நடுதல், பாலின பாகுபாடு போன்றவை குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள்) ஈடுபடக்கூடிய ஊரக பகுதிகளில் உள்ள வட்டார அளவிலான கூட்டமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் நகர்ப்புர பகுதிகளில் உள்ள நகர அளவிலான கூட்டமைப்புகள், பகுதி அளவிலான கூட்டமைப்புகள், மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற சமுதாய அமைப்புகளிடமிருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது.
எனவே, விருது பெற விருப்பம் உள்ளவர்கள் ஏப்ரல் 30ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் 2 வது தளத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் (அறை எண்: 215) நேடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post மணிமேகலை விருது பெற விண்ணப்பம் வரவேற்பு appeared first on Dinakaran.